- Advertisement -

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு!

1

- Advertisement -

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பறிந்துறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தில், மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவகத்தில் இன்று மனு அளிக்க உள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

Vagai
Bismi

இதன் ஒரு பகுதியாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க இருந்தனர். இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்…

அனைத்து மாநிலத்திலும் விவசாயிகள் மனு அளித்து வருகின்றனர். ஆனால் திருச்சியில் மட்டும் காவல்துறையினர் வெளியே விடாதபடி வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்றால் ரயில் நிலையத்தில் மறிக்கின்றனர். இது அரசியல் சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது. இது மனித உரிமை மீறலாகும். இது ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா. நாங்கள் போராட்டத்தின் போது பஸ்ஸை மறிக்கிறோமா அல்லது ஏதாவது சேதப்படுத்துகிறோமா.
நாங்கள் இப்போது கேட்க விரும்புவது மத்திய அரசை தான். உச்ச நீதிமன்றம் மாதாமாதம் தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், தற்போது தண்ணீர் நிரம்பிய உடன் கர்நாடகா நீரை திறந்து விடுகிறது. தமிழகத்தை வெள்ளம் வடியும் மாநிலமாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது குருவை சாகுபடி முடிந்து விட்டது. சம்பா சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதமாகும். இப்போது விடப்படும் தண்ணீர் கடலில் தான் செல்ல போகிறது. இந்த தண்ணீரை திருப்பி அய்யாரில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதையும் செய்வதில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி டெல்லியில் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களை தடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். டெல்லியிலும் இதற்கான உத்தரவை பெற்றுள்ளோம் என்றார். மேலும் வீட்டு காவல் வைத்ததற்கான காரணம் குறித்து காவல்துறையிடம் கேட்டபோது
டெல்லியில் அமித்ஷாவிடம் இருந்து விடக்கூடாது என்று உத்தரவு வருகிறது என கூறுகின்றனர். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. back biome says

    **back biome**

    Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்