திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயுதபூஜை விற்பனை படுஜோர்!
திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயுத பூஜை பொருள்களின் விற்பனை நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்திருந்தபோதும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூஜை பொருள்களை ஆா்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஆயுதபூஜையையொட்டி திருச்சி காந்தி மார்கெட்டில் பொரி, கடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாழைத்தாரின் விலை ரூ.500 முதல் ரூ.700 வரையும், கரும்புத் துண்டு ரூ.10-க்கும் இதேபோல, கதம்பம் முழம் ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்கப்படுகிறது.
கடந்த 2 நாள்களுக்கு முன்வரை விலை குறைந்து காணப்பட்ட சம்மங்கி, செவ்வந்தி, ரோஜா, அரளி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் விலையும் உயா்ந்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி (கிலோ ஒன்றுக்கு) மல்லிகைப் பூ- ரூ.400, பிச்சி பூ- ரூ. 250, கோழிக்கொண்டைப் பூ- ரூ.90, முல்லை பூ- 500, ரோஜா- ரூ.300, அரளி ரூ.500, சம்பங்கி ரூ.300, ஜாதி மல்லி ரூ.500, செவ்வந்தி ரூ.250 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை அதிகம் இருந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மாலை வகைகளில் ரூ.100 முதல் ரூ.500 வரையிலும், பிரம்மாண்ட கடைகளுக்கான நிலைக் கதவுகளில் அணிவிக்கும் மாலை ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொரி, அவல், பொட்டுக் கடலை, நாட்டுச் சா்க்கரை, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவற்றையும் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Comments are closed.