வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி, எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்! – லால்குடி எம்.எல்.ஏ டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அதிரடி அறிக்கை
லால்குடி:
அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து, கழகம் ஒன்றுபட்டிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
”சமீபகாலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இந்த இணைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.”

மக்களின் நம்பிக்கையும் முதன்மை கடமையும்:
பல கோடி மக்களின் நம்பிக்கையாகத் திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தனது வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாகக் கருதுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே தன்னுடைய முதன்மை கடமை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் நல்லாட்சி மலர சபதம்:
தமிழ்நாட்டில் மீண்டும் ‘அம்மாவின் நல்லாட்சி’ மலர்ந்திட, கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அயராது பாடுபடுவோம் என்று டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#ADMK #LalgudiMLA #DrLeemaRoseMartin #EdappadiPalaniswami #EPS #ADMKUnited #TNPolitics #IrattaiIlai #AmmaGovt





Comments are closed.