- Advertisement -

டாஸ்மாக்கில் ஏற்பட்ட முறைகேடு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி!

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்… அப்போது,

Vagai

கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக், டிஸ்லரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது தெரியும், ED நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழலை கண்டுபிடித்திருக்கிறோம், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.

திமுக ஆட்சி சயின்டிபிக் கரப்சனுக்கு பெயர் போன ஆட்சி, டாஸ்மாக்கில் ஊழல் நடந்தது போல, சென்னை மாநகராட்சியில் கக்கூஸ் ஊழல் நடந்துள்ளது.
நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, அது நல்ல விஷயம். ஆனால் அது மக்களுக்கு போய் சேருகிறதா என ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.

டெல்லியில் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து, அவரே ஊழல் குற்றவாளியாக ஆனார். கைது செய்யப்பட்டார், ஆனால் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கை என்றார்கள்.கெஜ்ரிவாலை டெல்லியில் மூன்று முறை முதல்வராகிய மக்களே அங்கு படுதோல்வியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்காக தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். திமுகவில் தற்போது டாஸ்மாக் ஊழல் வந்துள்ளது. கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும். பழனிச்சாமி ஆட்சியில் இருந்த கடன் எல்லாம் EPS ஊழல் என்று சொன்னார். இவர் வந்ததும் நாலரை லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. அவர்களை குறை கூறியவர்கள் இவர்கள் என்ன செய்தார்கள்… செலவழிக்கப்பட்ட பணம் மக்களை சென்றடைந்ததா என கேள்விக்குறியாக உள்ளது. 2026க்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சிக்கு வருவோம். நல்லாட்சி தொடர்ந்து வழங்கி வருவதால் பாஜக மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக கடனை ஒழித்து ஏழை எளிய மக்களுக்கு,போராட்டம் நடத்துகின்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பிற்கும் ஒரு சுபிட்சமான ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என உறுதி அளிக்கிறேன்.

Bismi

திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் திமுகவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும். திமுகவுக்கு எதிராக செயல்பட அதிமுகவாக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் சேர வேண்டும். அதில் “வித் & வித்தவுட் பழனிச்சாமியா என்று தெரியாது. 90% தொண்டர்களின் மன வெளிப்பாடு தான் செங்கோட்டையன் வழிபடுத்தி இருக்கிறார். 90% தொண்டர்கள் அதிமுக ஒன்றிணைய எதிர்பார்க்கிறார்கள். பழனிச்சாமி தலைமையில் அதிமுக பலவீனம் அடைகிறது. இரட்டை இலை திமுகவின் வெற்றிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வத்திற்கும், எங்கள் சித்திக்கும் (சசிகலா) ஆகியோருக்கும் பொருந்தும் ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாங்கள் அணியாக தான் செயல்படுவோம்.

முதலமைச்சராக ஆக்கியவர்களுக்கு யார் துரோகம் செய்தார் என்பது தெரியும்.? சுயநலம், பதவி வெறி, ஏதோ செய்து பொதுச்செயலாளர் ஆகிவிட்டோம் என்ற பயம் இருக்கிறது. ஓர் அணியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து. திமுக சட்டமன்றத்தில் அம்மாவை தாக்கியதை பாராளுமன்றத்தில் கோடிட்டு காட்டினார்கள்.

மோடியா.. லேடியா.. என்ற நிலை வந்த போது மக்கள் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் அம்மா மோடிக்கு எதிரானவர் அல்ல, அவர்கள் நல்ல நண்பர்கள், அது எதிரான கருத்து கிடையாது.

காலப்போக்கில் ஒரு இணைப்பு மொழியாக மூன்றாவது ஒரு மொழி உருவாக வேண்டும் என அண்ணா கூறினார். அந்த மொழி இந்தியாக தான் இருக்க வேண்டும் அதனை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டிருப்பார், என்பது தான் என்னுடைய கருத்து என, அண்ணா பேசிய கருத்துக்களை வாசித்து காட்டினார்….. முதலமைச்சரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர், இந்த ஒரு வருஷம் அவர் அப்பாவாக இருந்து விட்டு போகட்டும் என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்