- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் ₹.94.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் பெறுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு (ஜனவரி 29)

Bismi

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி 1141 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ₹.94,53,185 ஆகும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்