திருச்சியில் சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன், சுரேஷ் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

Bismi

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சுரேஷ்குமார், சாமிநாதன், பணியாளர் ரவி, ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்