- Advertisement -

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

- Advertisement -

உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி – 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

Bismi

Vagai

இதில் இந்தியா சார்பில் திருச்சியில் இருந்து 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகள் 16 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை குவித்ததுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்களை குவித்து விமானம் மூலம் திருச்சி வருகை புரிந்த சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் திரளாக பங்கேற்று சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பினை அளித்தனர். அதேநேரம் ஏற்காடு, குண்டூர் கிராமத்தில் இருந்து மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவி முதன்முறையாக சிலம்பம் விளையாடி 3 தங்கப்பதக்கம் வென்ற நிலையில் அவருக்கும் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்