- Advertisement -

புதுக்கோட்டை குளத்தூர் அரசு பள்ளியில் நடைபெற்ற குறுவட்டம் அளவிலான சிலம்பப் போட்டி: சேதுபதி சிலம்பம் பாசறை மாணவர்கள் அசத்தல் வெற்றி!

- Advertisement -

புதுக்கோட்டை குளத்தூர் அரசு பள்ளியில் நடைபெற்ற குறுவட்டம் அளவிலான சிலம்பப் போட்டி: சேதுபதி சிலம்பம் பாசறை மாணவர்கள் அசத்தல் வெற்றி!

 

​புதுக்கோட்டை:

2026 – 27 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், புதுக்கோட்டை குளத்தூர் அரசு பள்ளியில் குறுவட்டம் அளவிலான சிலம்பப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

Vagai

​இந்தத் தொடரில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ‘சேதுபதி சிலம்பம் பாசறை’ மாணவ, மாணவிகள் தங்களது அசாத்திய திறமையால் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த பாசறையைச் சேர்ந்த 23 மாணவச் செல்வங்கள் முதலிடம் பெற்று தங்களது பாசறைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 

Bismi

​50 – 60 கிலோ எடைப் பிரிவில் கீரனூர் மாணவர் பழனிமுத்து முதலிடம்!

 

​இப்போட்டியில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் பழனிமுத்து (பெற்றோர்: கருப்பையா – பொன்னேஸ்வரி) 50 முதல் 60 கிலோ எடைப் பிரிவில் களம் இறங்கினார்.

 

​களத்தில் திறம்பட விளையாடி, எதிராளிகளை வீழ்த்திய பழனிமுத்து, தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து பதக்கத்தை வென்றார்.

 

​மாணவர் பழனிமுத்துவின் இந்த சிறப்பான வெற்றிக்குக் காரணமான சேதுபதி சிலம்பம் பாசறை பயிற்சியாளர் கார்த்திகேயன் மற்றும் பாசறையின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும், பழனிமுத்துவின் தந்தை மற்றும் கீரனூர் பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

 

 

​#Pudukkottai #SilambamChampionship #SportsNews #Keeranur #SethupathiSilambamPasarai #TamilNaduSports #TraditionalMartialArts #SchoolEducationDepartment

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்