- Advertisement -

பூனாம்பாளையம் கிராமத்தில் முழு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

- Advertisement -

கிராம பள்ளிகளில் பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் கிராமாலயா சார்ப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பூனாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

Bismi

அனைத்து கிராமப்புற குடியிருப்புகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, பூனாம்பாளையம் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலராக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை உபயோகம், கை கழுவும் முறை, திடக்கழிவுகளை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், அவற்றை உரமாக மாற்றுவது அதனைத்தொடர்ந்து அதேபோல், தெருக்களைத் தூய்மையாக்குதல், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து தரம் பிரித்து வெளியேற்றி கழிவுகள் இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்குதல் என நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் நடத்தி கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் விளக்கி நடித்து காண்பித்தனர்.

Vagai

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராமாலயா நிர்வாகிகள் பழனியாண்டி, செந்தில்குமார், கிருத்திகா, கலை நிகழ்ச்சி நடிகர்கள் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்