- Advertisement -

திருச்சியில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி கோலாகலம்!

- Advertisement -

திருச்சியில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி கோலாகலம்!

​திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பெருமையுடன் துவங்கும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ஆகியவற்றின் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

​இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மண்டல தலைவர் முகமது ஷபி துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன், வட்டாரத் தலைவர் சரவணன் மற்றும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் சில்வியா நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Vagai
Bismi

​சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லயன்ஸ் கிளப் வழிகாட்டல் மாவட்ட தலைவர் ரத்தினகுமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், 1917-இல் மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் சமூக மேம்பாட்டிற்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பன்னாட்டு லயன்ஸ் சங்கம், இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ (We Serve) என்ற தாரக மந்திரத்துடன் இயங்கி வருவதைக் குறிப்பிட்டார். மேலும் ‘LIONS’ என்பதன் பொருள் Liberty (சுதந்திரம்), Intelligence (புத்திசாலித்தனம்), Our Nation’s Safety (நமது நாட்டின் பாதுகாப்பு), Needs (தேவை) மற்றும் Service (சேவை) என்பதை விளக்கிய அவர், ஹெலன் கெல்லரின் வேண்டுகோளுக்கு இணங்க கண் சிகிச்சை முகாம்கள், பார்வை குறைபாடு தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசிப்பிணி போக்கல் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற சேவைகளை உலகளவில் செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, உறுப்பினர்கள் அனைவரும் தொண்டும் தோழமையுமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

​இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் ரகுபதி ராஜன், செயலர் சிவராமன், பொருளாளர் சூரிய நாராயணன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க தலைவர் ஹேமலதா, செயலர் விஜயகுமார், பொருளாளர் முகமது ஹயாஸ், துணைத்தலைவர்கள் முனைவர் சங்கர், கணேசன், இயற்கை மருத்துவர் கௌதமன், ஹரி பிரசாத், மகேஸ்வரி, கிருஷ்ண காந்த், உஷா கேசவன், சந்தானம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

​#Trichy #LionsClub #LionsClubsInternational #WeServe #TrichyLions #LionsClubOfVision #MalaikottaiRoyalLions #TrichyNews #SocialService #MelvinJones

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்