திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு கூலித்தொழிலாளி என்பவரது மகள் அனுஷ்கா வயது (17),இவர் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் தற்சமயம் தேர்வு எழுதியிருந்தார்.
இவர் பள்ளி
சென்று விட்டு வீட்டுக்கு வந்த பின்னர் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவரது தாய்,
படிக்கும் நேரத்தை தவிர மற்ற
நேரங்களில் வீட்டு வேலைகள் செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயை மிரட்டுவதற்காக நேற்று முன்தினம்
அனுஷ்கா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், உடல் முழுவதும் தீப்பற்றிய எரிந்த நிலையில் அனுஷ்கா அலறித் துடித்துள்ளார்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து,
அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து
சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக
உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.