திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா 50 சதவீத பணிகள் நிறைவு – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்…

Bismi

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் (1/3 பொதுமக்கள் பங்களிப்புடன்) திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.3 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் (20.11.2023) அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டைய தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7D திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்பொழுது இப்பூங்காவில் 50 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவாக பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்