- Advertisement -

வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை – திருச்சி எஸ்.பி வருண்குமார் பேட்டி!

0

- Advertisement -

வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை – தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருவதால் பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் யார் மீதும் தாக்குதல் நடத்த  கூடாது – திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவுறுத்தல்
திருச்சி மாவட்ட
Vagai
காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
குழந்தை கடத்தல் தொடர்பாக அதிகமான சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகிறது – குறிப்பாக கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது – ஆனால் தமிழகத்தில் அந்த மாதிரியான சூழல் இல்லை.
தமிழகம் முழுவதும் 10லட்சம் புலம்பெயர்ந்த தொழிலர்கள் உள்ளனர். எல்லா இடங்களிலும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது
இதே போல் புலம்பெயர்ந்த  தொழிளர்கள் திருச்சியில் அதிகமாக உள்ளார்கள். அவர்கள் மீது யாரும் தவறாக தாக்குதல் நடத்தி விடக்கூடாது.
வதந்திகளை நம்பி யாரையும் தவறாக தாக்கி விடக்கூடாது.
Bismi
பொதுமக்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு அவரை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் இருந்தால் அவர்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக காவல்துறை புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். உண்மை என்னவென்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
சமூக வலைதளத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொய் செய்தியை பரப்பினால் அவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை கடத்தல் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்த அனைத்து காவல்துறை ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவு போதை பொருள் புழக்கம் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் நிற்பதை தடுப்பதற்கு 30 காவலர்கள் இருசக்கர வாகனத்தில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து 100 என்ற எண்ணை அழைக்கவும். அதிகபட்சம் ஏழு நிமிடத்தில் இருந்து 10 நேரத்திற்குள் வந்து விடுவார்கள் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்