- Advertisement -

திருச்சியில் பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

0

- Advertisement -

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி மேற்கு தொகுதி 25 வது வார்டு மேலத்தெரு நேருஜி நகரில் நடைபெற்றது.

Bismi

கிராம தலைவர் முருகானந்தம் மற்றும் மனோத் ராஜ், தங்கவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக (திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம்) மாவட்ட பெண்கள் நல்வாழ்வு மையப்பிரிவில் பணியாற்றும் ரோகினி மற்றும் காஜாமலை மகளிர் மன்றத்தில் குடும்ப ஆலோசகராக பணிபுரியும் இராஜமகேஷ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் பணியிடத்தில் பெண்களைத் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு சட்டங்கள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியினை பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை துணை பேராசிரியர் முனைவர் அருண்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முதுகலை முதலாமாண்டு மாணவி நகோமி ரேச்சல் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மேலத்தெரு நேருஜி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்