- Advertisement -

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது!

1

- Advertisement -

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று மாலை கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆசியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையேற்று தொடங்கி வைத்து தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியை பார்வையிட்டு, நிகழ்வில் கலந்து கொண்ட கலைக்குழு தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

Vagai
Bismi

மேலும் இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் பண்ணை எம்பி. சிங்காரவேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகம், காளி, பொய்க்கால் குதிரை ஆட்டம், வள்ளி திருமணம் இசை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்