டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் கைது!

0

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை தர வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது காவல்துறையினரை வைத்து கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசை கண்டித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Bismi

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் சிவசாமி, லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம், செந்துறை ஒன்றிய அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்