- Advertisement -

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் டிச.7 ஆம் தேதி ஏலம் – கமிஷனர் அறிவிப்பு!

0

- Advertisement -

திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

Bismi

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து அந்த 126 வாகனங்களையும் டிசம்பா் 7 ஆம் தேதி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர (கே. கே. நகா்) ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணியளவில் ஏலம் நடைபெற உள்ளது. இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 5, 6-ஆம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 5 வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை பாா்வையிடலாம். மேலும் ஏலம் நடைபெறும் நாளில் ( டிசம்பா் 7) காலை 8 முதல் 10 மணிக்குள் முன்வைப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை நகலை செலுத்தி பெயா், விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் முடிந்ததும், ஏலத் தொகை மற்றும் சேவை வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்