- Advertisement -

வாகன முகப்பு விளக்குகளில் புல்ஸ்ஐ ஒளி தடுப்பான் வில்லை ஒட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தினர்!

- Advertisement -

வாகன முகப்பு விளக்குகளில் புல்ஸ்ஐ ஒளி தடுப்பான் வில்லை ஒட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தினர்!

 

சாலை விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்றது.

Bismi

லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார்.வட்டாரத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சங்க சாசன செயலர் விஜயகுமார், துணைத்தலைவர் சங்கர், கணேசன் ஹரி பிரசாத், இயற்கை மருத்துவர் கௌதம், மகேஸ்வரி உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன முகப்பு விளக்குகளில் புல்ஸ் ஐ ஒளி தடுக்கும் தடுக்கும் வில்லையை ஒட்டினார். சாலை பாதுகாப்பு செயற்திட்டத்தில் ஒலி தடுப்பான் வில்லை ஒட்டுவது குறித்து சாசன செயலர் விஜயகுமார் பேசுகையில்,இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டுநர்களுக்கு கண் கூசலை ஏற்படுத்தும் அதிக ஒளியின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் புல்ஸ்ஐ ஒளி தடுப்பான் வில்லை (Bull’s Eye Light Blocker) ஒட்டப்பட்டன.

Vagai

மேலும், தேவையற்ற உயர் ஒளி (High Beam) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றவும், சாலைப் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கான விழிப்புணர்வை பரப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்