நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக வாங்கிய கடன் விவகாரத்தில், செக் மோசடி வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக வாங்கிய கடன் விவகாரத்தில், செக் மோசடி வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக சினிமா பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் பெற்றிருந்தார். படம் வெளியான பிறகும் கடன் தொகையை அவர் திருப்பிச் செலுத்தாத நிலையில், அதற்குப் பதிலாக காசோலையை (Cheque) வழங்கியுள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பப் பெறப்பட்டது (Bounce).
இதையடுத்து, காசோலை மோசடி தொடர்பாக நடிகர் விமல் மீது சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது பைனான்சியர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதாடினார்.


வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி, நடிகர் விமல் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தும், வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது நடிகர் விமல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். இதைத் தொடர்ந்து, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதால், தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விமல் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக அவரது சிறைத்தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
#ActorVimal #ChequeBounceCase #MannarVagaiyara #ChennaiCourt #VimalSentenced #TamilCinemaNews





Comments are closed.