- Advertisement -

சிறுமருதூரில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பனை விதை நடும் திருவிழா: லால்குடி தன்னார்வலர்கள் பங்கேற்பு!

- Advertisement -

சிறுமருதூரில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பனை விதை நடும் திருவிழா: லால்குடி தன்னார்வலர்கள் பங்கேற்பு!

 

திருச்சி ​லால்குடி:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் உன்னத நோக்கோடு, ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் சார்பில் பனை விதைகள் நடும் விழிப்புணர்வு இயக்கம் சிறமருதூர் கிராமத்தில் நடைபெற்றது.

 

Vagai

​லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறுமருதூர் கிராமத்தின் பங்குனி வாய்க்கால் கரைகளில், 13.09.2026 அன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையிலும் மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும் ஏராளமான பனை விதைகள் ஆர்வத்துடன் நடப்பட்டன.

 

Bismi

​இப்பணிக்கு வலுசேர்க்கும் விதமாக லால்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்தனர்.

 

​லால்குடி பகுதி: A.S. கார்த்திகேயன், காந்தி மார்க்கெட் S. வெங்கடேஷ், லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்த B. கார்த்திகேயன், J. கார்த்திகேயன்.

 

​வாளாடி பகுதி: M. வெங்கடேஷ், S. ராஜேஷ்குமார், L. நவநீதகிருஷ்ணன்.

 

​பிற பகுதிகள்: பி.கே. அகரம் செந்தில்குமார் மற்றும் தீபன் பரணி.

 

​மண்ணின் வளம் காக்கவும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் முன்னெடுக்கப்பட்ட இந்த பசுமை முயற்சியை அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் வெகுவாகப் பாராட்டினர். தொடர்ந்து நீர்நிலைகளின் கரைகளில் பனை மரங்களை நட்டுப் பராமரிக்கப் போவதாக தன்னார்வலர்கள் உறுதியேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்