- Advertisement -

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கையாளும் அளவிற்கு பெண் காவலர்கள் இல்லை 

- Advertisement -

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கையாளும் அளவிற்கு பெண் காவலர்கள் இல்லை

 

​திருச்சி, ஜூன் 20:

​திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில், தனது தாயைக் கைது செய்ததைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் மழையில் நனைந்தபடி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட பெண்ணை அப்புறப்படுத்தவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ பெண் காவலர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Vagai

​நடந்தது என்ன?

 

​திருச்சி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் – வளர்மதி தம்பதியினர் தங்களது குடோனை வாடகைக்கு விட்டிருந்தனர். இந்தத் திருட்டு வழக்கில், அவர்களின் மகன் கோபிநாத் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தாய் வளர்மதிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, காவல்துறையினர் அவரை விசாரணைக்காகக் கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

 

​தகவலறிந்து விராலிமலையிலிருந்து வந்த வளர்மதியின் மகள் மகேஸ்வரி, தனது தாயைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்தார். “தவறு செய்த மகனுக்குப் பதில் தாயைக் கைது செய்தது ஏன்?” என மருத்துவமனை நுழைவாயிலிலேயே அவர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

 

​பெண் காவலர்கள் பற்றாக்குறை:

 

Bismi

​சாலை நடுவே அமர்ந்து போராடிய மகேஸ்வரியைச் சமாதானப்படுத்தவோ அல்லது அங்கிருந்து அப்புறப்படுத்தவோ நீண்ட நேரம் பெண் காவலர்கள் யாரும் பணியில் இல்லை. ஆண் காவலர்கள் மட்டுமே சூழ்ந்து நின்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பெண் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண் காவலர்களால் அவரைத் தொட்டு அப்புறப்படுத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவியது.

 

​நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிவில் உடையில் வந்த பெண் காவலர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அந்தப் பெண் முரண்டு பிடித்ததால், துணை ஆணையர் நேரில் வந்து, “இது அரசு மருத்துவமனை வளாகம், இங்கு இதுபோன்று போராட்டம் நடத்துவது தவறு. உங்கள் புகாரை கே.கே. நகர் காவல் நிலையத்தில் முறையிடுங்கள்” என்று விளக்கமளித்த பிறகே அந்தப் பெண் அங்கிருந்து கலைந்து சென்றார்.

 

​சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

​தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில், பெண் காவலர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

​இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “பெண் போராட்டத்தில் ஈடுபட்டாலே கையாள்வதற்குப் பெண் காவலர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. மருத்துவமனைக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற போராட்டங்களைச் சட்டப்படி கையாள்வதற்கும் இந்த காவல் நிலையத்தில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

​செய்தி தொகுப்பு:

சோழன் பார்வை செய்தி ஆசிரியர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்