- Advertisement -

உர விலை உயர்வு: ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்கங்கள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

உர விலை உயர்வு: ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்கங்கள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!

திருச்சி:

Vagai

ஒன்றிய அரசின் உர விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசின் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் திருச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் திரளான விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

​கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை; விவசாயிகளுக்கு சுமையா? – அயிலை சிவசூரியன் சாடல்

Bismi

​ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கடுமையாக வி விமர்சித்தார். அவர் கூறியதாவது:

​”ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ₹25 லட்சம் கோடிக்கும் மேல் கடன்களைத் தள்ளுபடி செய்து சலுகை வழங்குகிறது. ஆனால், கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலையை 25% முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. வளைகுடாப் பகுதி போரைக் காரணம் காட்டி சாக்குபோக்கு சொல்வதை விடுத்து, உரங்களுக்குக் கூடுதல் மானியம் வழங்கி விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இந்த விலை உயர்வு விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் செயலாகும்.”

​தமிழக அரசுக்குக் கோரிக்கை: “அழுகிற பிள்ளைக்குத் தேன் தடவுவது போல் உள்ளது”

​தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்தும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.

​”தேர்தல் பிரசாரத்தின் போது சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாகவும், பெரிய விவசாயிகளின் கடன்கள் 50% அளவிற்கும் தள்ளுபடி செய்யப்படும் என விஜய் அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது அரசு அறிவித்துள்ள சலுகை என்பது அழுகிற பிள்ளைக்கு விரலில் தேனைத் தடவி வைப்பது போலப் போதுமானதாக இல்லை. எனவே, தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்து, தேர்தல் கால வாக்குறுதிப்படி கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என அயிலை சிவசூரியன் வலியுறுத்தினார்.

​#Trichy #FarmersProtest #FertilizerPriceHik #TamilNaduFarmers #VijayGovt #CropLoanWaiver #AgriNews #CentralGovt

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்