- Advertisement -

திருச்சியில் சாதனை 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ‘தி ஐ பவுண்டேஷன்’

- Advertisement -

திருச்சியில் சாதனை 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ‘தி ஐ பவுண்டேஷன்’

 

​உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள ‘தி ஐ பவுண்டேஷன்’ கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் 106 வயது முதியவருக்கு வெற்றிகரமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விபரம் பகிரப்பட்டது.

Vagai

மருத்துவர் அர்ச்சனா தெரேசா, ​செய்தியாளர்களிடம் கூறிய பொழுது

குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:

 

​அறிகுறிகள் அற்ற பாதிப்பு: குளுக்கோமா என்பது உலகளவில் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது எவ்வித அறிகுறியும் இன்றி மெதுவாக பார்வையைப் பறிக்கும் தன்மை கொண்டது.

​யாருக்கெல்லாம் பாதிப்பு அதிகம்?

Bismi

40 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், கிட்டப்பார்வை உடையவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் யாருக்காவது

இந்நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது.

 

​சிகிச்சை முறைகள்:

கண் சொட்டு மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

 

​106 வயதில் மீண்ட பார்வை:

ஒரு மருத்துவ சாதனை

​இந்த மருத்துவமனையின் ஒரு மைல்கல்லாக, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜு (106 வயது) என்ற முதியவருக்கு கண்புரை மற்றும் கண் அழுத்த பாதிப்பிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

​”அதிக வயது காரணமாக இருந்த சவால்களைத் தாண்டி, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது ராஜு அவர்கள் தனது பார்வையைத் திரும்பப் பெற்று, தனது அன்றாடத் தேவைகளைத் தாமாகவே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்,” என்று மருத்துவர் அர்ச்சனா தெரேசா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

​இதையும் படியுங்கள்: ஆண்டுதோறும் மார்ச் 2-வது வாரம் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்