சசிகலாவையும்,ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சசிகலாவையும்,ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன். தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவாக கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க.வை வீழ்த்தி 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது. திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலா,ஓபிஎஸ் இணைக்க பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்விக்கு ?

அதிமுகவில் மீண்டும் சசிகலாவையும்,ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது. அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் யார் தலைமையில் ஆட்சி இருக்கும்?

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி. தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றமில்லை. யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது.
பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார்.





Comments are closed.