திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்-அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்-அமைச்சர் ரகுபதி

Bismi

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இன்றைக்கு நீதிபதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் தலைமையில், சிலர் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சட்டத்திற்கு புறம்பான உத்தரவுகளை தந்து இருக்கிறார்கள்.தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத பழக்கத்தை, இதுவரை இல்லாத வழக்கத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்