- Advertisement -

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி

- Advertisement -

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி

Bismi

பா.ம.க.வின் கட்சி நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை நீடித்து வருகிறது.இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார்.இந்த நிலையில் ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

46 ஆண்டு காலம் நான் ராமதாசுடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலம் கட்சி தலைவராக இருந்திருக்கிறேன்.என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. கட்சியில் ஒருவரைச் சேர்க்கவும், நீக்குவதற்கான அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.பா.ம.க.வில் சேர வேண்டும் என்று அன்புமணி நினைத்தால், ராமதாசை நேரில் சென்று பார்க்க வேண்டும். அவர் சேர்த்துக் கொண்டால் கட்சியில் இருங்கள்.அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான். அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்? கொஞ்சம்கூட மனசாட்சி வேண்டாமா?. பா.ம.க. என்ற ஆலமரம் ராமதாஸ்தான். தற்போது ராமதாஸ் கை ஓங்கிக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல செய்தியை அறிவிப்பார் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்