டெல்லிக்கு புறப்பட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!

டெல்லிக்கு புறப்பட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!

Bismi

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றார்.அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் இபிஎஸ்-ஐ சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஏதும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார். இருந்தாலும், இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார்.அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என தெரிகிறது. இந்தப் பயணம், அதிமுக – பா.ஜ. கூட்டணியின் முக்கிய அம்சமா மாறியுள்ளது .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்