நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Bismi

நடிகர் தனுஷ் நடிப்பில் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி-54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்தனர்.

அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டு பூஜையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்