தவெகவினர் எல்லை மீறியதால் போலீசார் தடியடி-புதுவையில் பரபரப்பான சூழல் .
தவெகவினர் எல்லை மீறியதால் போலீசார் தடியடி-புதுவையில் பரபரப்பான சூழல் .

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு செல்ல தொண்டர்கள் முண்டியடித்ததால் நுழைவு வாயலை மூடி போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மைதானத்திற்குள் செல்ல தொண்டர்கள் முண்டியடித்ததால் பொதுக்கூட்டம் மைதானத்தின் என்ட்ரன்ஸ் கேட் மூடப்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்தியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார்களை தள்ளிக்கொண்டு ஏரளமானோர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி உப்பளம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. டோக்கன் வினியோகிப்பதிலும் கூட சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் காலை முதலே தொண்டர்கள் அந்த பகுதிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என சொல்லப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது அதிகளவில் புதுச்சேரி தொண்டர்கள் முண்டியடித்து செல்கின்றனர் . இதனால் அங்கு ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் நுழைவு வாய்களை மூடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.


Comments are closed.