பாமக வழக்கில் சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாமக வழக்கில் சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
டெல்லி நீதிமன்றத்தில் பாமகக்கு தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த வழக்கில் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு .
ஒருபுறத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இரு தரப்பும் தங்களுக்கே கட்சி சொந்தம் தங்களுக்கே அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து உரையாடி வரக்கூடிய நிலையில் நீதிமன்றம் தற்போது அவர்களுக்கு உரிமையல் நீதிமன்றத்தை அணுக தற்போது அறிவுறுத்தியுள்ளது . இந்த வழங்கில் இருக்கக்கூடிய விவகாரம் தொடர்ந்து தேர்தல் வரையில் கூட நீடிக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது .

இன்று இவ்வழக்கியின் விசாரணை நடந்தது ,
இந்த வழக்கில் பல்வேறு முக்கிய வாதங்கள் வந்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பாக ராமதாஸ் தரப்பிடமிருந்து பல்வேறு முக்கிய வாதங்கள் வைத்தனர் .அன்புமணி போலியான ஆவணங்களை வந்து தாக்கல் செய்து தான் பொதுச் செயலாளர் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என கூறி மீண்டும் தலைவராக 2026 வரை இருப்பதாக இருக்கும் ஆவணங்களை தேர்தல் ஆணயத்தில் கொடுத்திருக்கின்றார்.
அதன் அடிப்படையிலே அவரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக ஒரு குற்றச்சட்டம் முன்வைத்திருந்தார்கள். தேர்தல் ஆணையம் தான் வாதங்களை முன்வைத்தனர் . இது ஒரு உள்கட்சி விவகாரம். உள்கட்சியில் இருக்கக்கூடிய இரு தலைவர்களுக்கு பிரச்சினை என்றால், அதில் நாங்கள் தலைவர்களுக்கு எந்த ஒரு முகாந்தரமும் தரமுடியாது .எனவே அவர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு முடிவுகளையும் தங்களால் எடுக்க முடியாது முழுமையாகவே அந்த ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு முடிவை எடுத்ததாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தார்கள்.மனுதாரர் மருத்துவர் ராமதாஸ் தரப்பிடமிருந்து ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த ஆவணங்கள் முழுமையாக இல்லை எனவே தான் இந்த ஒரு முடிவானது எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் ஒரு வாதங்களை மனுக்களாக முன்வைத்திருந்தார்கள். போலி ஆவணங்களை தான் வைத்து இந்த ஒரு முறைக்கேடான ஒரு வழியில் தேர்தல் ஆணயத்தில் இந்த ஆவணங்களை சமர்ப்பித்துகிறார். நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். குறிப்பாக இது அங்கீகரிக்கப்பட்ட கட்சியா? ஒருவேளை அங்கீகரிக்கப்படாத கட்சி என்றால் அதற்கான நடைமுறை என்ன?அங்கரிக்கப்படாத இந்து போன்ற கட்சியில் கட்சிக்குள் ஒரு பிரச்சனை என்றால் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் இது போன்ற ஒரு சூழல் தொடர்ந்து நிடித்தால் கட்சியினுடைய சின்னம் முடக்கி வைக்கப்படும். இரு தலைவர்களுக்கு பிரச்சனை இருப்பதால் அதில் யார் அந்த தேர்தல் வேட்பாளர்கள் படிவங்களில் கையெழுத்து தருவது போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றது. அந்த சமயத்தில் அவர்களுடைய அந்த கையெழுத்து ஏற்றுக் கொள்ளப்படாது என தேர்தல் ஆணையம் தெளிவாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். அனைத்து தரப்பினுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தற்போது சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு உத்தரவுனது பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது .
மனுதாரர்கள் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மீண்டும் உரிமையல் நீதிமன்றத்தை நாடலாம். சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும். தொகுதிகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் இப்படியான நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்நிலையில் தந்தையும் மகனும் எதிரெதிராக நிற்கிறார்கள். பாமகவின் நிலை எப்படி இருக்கு? குறிப்பாக கட்சிக்குள் இருக்கக்கூடிய தொண்டர்கள் ஒரு குழப்பத்தில் இருக்கிறார்கள் .
இநிலையில் அன்புமணியை தேர்தல் ஆணயம் அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு திருபித்து பாமக ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


Comments are closed.