பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளர் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளராக ஜெயராம் பாண்டியன் நியமனம்!

PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளராகவும், திருச்சி மாவட்ட செயலாளராகவும் ஜெபி (எ) ஜெயராம் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை டாக்டர் இசக்கி ராஜா தேவரின் ஒப்புதலோடு, மாநில பொது செயலாளர் வள்ளி கண்ணு வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாகி ஜெயராம் பாண்டியனுக்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Bismi
இதுகுறித்து ஜெபி கூறுகையில்,…
தமிழ் நாடு முழுவதும் அதிக வாக்கு வங்கி உள்ள ஒரே சமுதாயம் தேவரினம். அவர்களுக்கு தேவையானவை நிறைய இருக்கிறது. அதை சரி செய்யவும், சீர் செய்யவும் இந்த இயக்கத்தில் இணைத்துள்ளேன். அண்ணன் இசக்கி ராஜா தேவர் ஏற்கனவே தேவர் சமுதாயம் மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தை சேர்ந்த பல தரப்பட்ட மக்களுக்கு PMT அறக்கட்டளை சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார், என்பதை தெரிந்து கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்து மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் நமது திருச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அண்ணன் இசக்கிராஜா தேவரின் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்