- Advertisement -

“நலம் காக்கும் ஸ்டாலின்” 15- வது சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்-சபாநாயகர் அப்பாவு.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர்!

- Advertisement -

“நலம் காக்கும் ஸ்டாலின்” 15- வது சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்-சபாநாயகர் அப்பாவு.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர்!

Bismi

திருநெல்வேலி,நவம்பர்15:-

Vagai

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.15) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பணகுடியில் 15- வது முகாம், அங்குள்ள “திரு இருதய மேல்நிலைப் பள்ளி” வளாகத்தில் நடைபெற்றது. இதனை, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா.சுகுமார் தலைமையில், “தமிழக சட்டமன்ற பேரவை தலைவர்” சபாநாயகர் மு. அப்பாவு “குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதயநோய், நரம்பியல், தோல் நோய், பல், கண், காது- மூக்கு- தொண்டை, மனநலம், இயன்முறை, காசநோய், நீரிழிவு, ஆயுஷ் ஆகியவற்றில் பிரிவுகளில் முகாமிற்கு வருவோருக்கு அவரவர் தேவைக்கேற்ப, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், வழங்கப்பட்டன. இது தவிர ஸ்கேன் வசதி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யும் வசதியும், இடம் பெற்றிருந்தன. பணகுடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான மக்கள் இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர். இதில், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. திருநெல்வேலி அரசு மருத்துவககல்லூரி முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜயசந்திரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முனைவர் ம. கிரகாம் பெல் ஆகியோர் உட்பட பலரும், கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்