டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து பாதுகாப்பு.
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து பாதுகாப்பு.

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். மேலும் கார் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து

டெல்லி கார் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொல்கத்தா, காசியாபாத், ஜம்மு, ஸ்ரீநகர், லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரித்து சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் வளாகங்கள் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்..





Comments are closed.