- Advertisement -

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை மாற்றப்பட்டது

- Advertisement -

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை மாற்றப்பட்டது

Bismi

திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு உள்ள ஹோட்டல் அமைந்துள்ள அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை 1994 ஆம் ஆண்டு 30 ஆண்டுகால குத்தகைக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகால குத்தகை தொகையாக ரூ.47,93,85,941 நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகளில் அந்த நிறுவனம் ரூ.9,08,20,104 மட்டுமே செலுத்தியது மீதமுள்ள ரூ.38,85,65,837 தொகையை செலுத்தாமல் ஹோட்டலை நடத்தி வந்தனர். இந்த நிலையில்  13.06.2024 – அன்று 30 ஆண்டுகால குத்தகை காலம் முடிவடைந்தது. இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு காலக்கெடு விதித்தது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தினர். ஹோட்டலுக்கு மேலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சுற்றுலா துறையை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

Vagai

ஹோட்டலில் தங்கி உள்ள விருந்தினர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஹோட்டல் இயங்கி வருகிறது.

 

இதனிடையே அங்கு இருந்த எஸ்.ஆர்.எம் ஹோட்டல் என்கிற பெயர் பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டு ஹேட்டல் தமிழ்நாடு என்கிற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்