திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி ஆகியவற்றை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி ஆகியவற்றை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!


மழைநீர் சேகரிப்பு, அதனை சேகரிப்பதின் அவசியம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் ஆகியன குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை, “தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்” சார்பாக, பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று ( அக்டோபர். 15) காலையில், “பச்சைக்கொடி” அசைத்து, துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், மழைநீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மழைநீர் சேகரிப்பினை பராமரிப்பது குறித்தும், மழைநீரை சேகரிப்பதால், நிலத்தடி நீர் உயரும், மண்வளம் பெருகும் போன்ற தகவல்களை தெரிவிக்கும் பொருட்டும், அதிக நவீன மின்னணு வாகனத்தின் மூலம், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது!”- என்று குறிபபிட்டார். முன்னதாக, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்த பேரணியில், பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயிண்ட் ஜான்ஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்து ராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய, 4 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், அட்டைகளையும் தங்களுடைய கரங்களில், ஏந்தியபடி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வே. ராம லட்சுமி உட்பட பலரும்,கலந்து கொணடனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.


Comments are closed.