புதுக்கோட்டையில் மாநில அளவிலான தடகள போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை
புதுக்கோட்டையில் மாநில அளவிலான தடகள போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை

புதுக்கோட்டை ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தடகளப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்து உள்ளனர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர் தங்கராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார் மேலும் இவ்விழாவில் ஆசிரியர் பெருமக்கள் வடிவேலு மதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகு மலர் மலைச்சாமி பெற்றோர் ஆசிரியர் தலைவர் மலைக்காமி எஸ் எம் ஜி தலைவர் ரேவதி சதீஷ் பழனி பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையா மற்றும் சத்துணவு பணியாளர்கள் உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி, பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மாணவிகளை வாழ்த்தினார்கள்





Comments are closed.