பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மார்புப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மார்புப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிர்மருத்துவ அறிவியல் துறை, ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பன்முக நிபுணத்துவ மருத்துவமனை, திருச்சி ஆகியவற்றின் இணைப்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காடசி நிகழ்ச்சி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்கள், ஆய்வாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மார்பகப் புற்றுநோயின் ஆரம்பக் கட்டக் கண்டறிதல், தடுப்பு வழிமுறைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

 

இந்த நிகழ்ச்சி டாக்டர் ஆர். காளிதாசன், பதிவாளர் (பொறுப்பில்), பாரதிதாசன் பல்கலைக்கழகம், அவர்களால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் அக்டோபர் 10 2025 அன்று பகல் 10:30 மணியாளவில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் ஜி. கோவிந்தராஜ் வர்த்தனன், மேலாளர், ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பன்முக நிபுணத்துவ மருத்துவமனை, பேராசிரியர் ஜி. மதன், துறைத் தலைவர், உயிர்மருத்துவ அறிவியல் துறை மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

Bismi

அறிவியல் அமர்வு தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கப்பட்டது. பேராசிரியர் ஜி. மதவ், உயிர்மருத்துவ அறிவியல் துறைத் தலைவர், வரவேற்புரையாற்றினார். பின்னர் இணைப் பேராசிரியர் எஸ். சரஸ்வதி, நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார். டாக்டர் ஆர், காளிதாசன், பதிவாளர் (பொறுப்பில்) துவக்க உரையாற்றி, பல்கலைக்கழகத்தின் உயிர்மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கான பங்களிப்பை வலியுறுத்தினார்.

 

முதன்மை உரை வழங்கிய டாக்டர் ஜி. கோவிந்தராஜ் வர்த்தனன், மேலாளர், ஹர்ஷமித்ரா ஆங்காலஜி (Oncology) பிரைவேட் லிமிடெட், மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வதில் விழிப்புணர்வு, நேர்மையான பரிசோதனை மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான கண்டறிதலின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவில் மட்டும் 2022 ஆம் ஆண்டில் 1.9 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் புதியதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இளம் பெண்களிடையே இதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது உயிர் வாழ்வை அதிகரிக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் டாக்டர் வி. ரவிக்குமார், வாழ்த்துரையாற்றினர். முக்கியமானதாகும் என்றும் ஒருங்கிணைப்பாளர், RUSA 2.0 வாழ்த்துரை ஆற்றினார்.

 

அறிவியல் அமர்வுகளில் டாக்டர் வினோத் குமார் லக்ஷ்மணன். சென்னை, பேராசிரியர், மருத்துவ ஆராய்ச்சியாளர், ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் டாக்டர் பி. சசிப்ரியா, மூத்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர், ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பன்முக நிபுணத்துவ மருத்துவமனை, திருச்சி ஆகியோர் மூலக்கூறு நோயறிதல் மற்றும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து சிறப்புரைகளை வழங்கினர்.

 

நிகழ்ச்சி முடிவில் இணைப் பேராசிரியர் டாக்டர் உயிர்மருத்துவ அறிவியல் துறை, எஸ். சண்முகப்ரியா. நன்றியுரையாற்றினார். பல துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு, சமூக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்