- Advertisement -

திருச்சியில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உருவப்படத்தை எரிக்க முயன்ற அதிமுகவினர் கைது!

- Advertisement -

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக அதிமுக பொதுசெயலாளரை அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில், சிங்காரத்தோப்பு அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.

Bismi

Vagai

ஆர்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உருவ படத்தை செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றை கொண்டு அடித்து அதிமுகவினர் கோஷமிட்டனர். தொடர்ந்து செல்வப்பெருந்தகை உருவ படத்தை தீயிட்டு கொளுத்த அதிமுகவினர் முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்