- Advertisement -

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது – திருமயம்

- Advertisement -

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது – திருமயம்

 

திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது.

புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம் மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் துரைமணி, மனவளக்கலை பயிற்சி முகாமிற்கு தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் மணிகண்டன்,செயலர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணியபுரம் அறிவு திருக்கோயில் பொருளாளர் துரை மணி வரவேற்றார். பயிற்சியை முதல்வர் முத்துராமு தொடங்கி வைத்தார்.

Vagai
Bismi

முகாமில் தன்னம்பிக்கை பேச்சாளரும் மனவளக்கலை பயிற்றுநருமான யுக சரண் பேசியதாவது:-

இந்த உலகமும், நமது வாழ்க்கையும் எப்போதும் அழகானது. நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த பெற்றோருக்கும், நமக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் மதித்து மரியாதை கொடுங்கள். அவர்களின் அறிவுரைகளை எப்போதும் தட்டிக்கழிக்காதீர்கள். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். வாழ்க்கையில் எதற்கும் கவலைப்பட்டு சோர்வடையாதீர்கள். வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது. நம்மால் முடியாது என்று எதையும் ஒதுக்கி விடாதீர்கள்.பயிற்சியும், முயற்சியும் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் அடையலாம். வெற்றி பெறலாம். எப்போதும் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள். நாம் ஆரோக்கியமாக இருப்பதுதான் வாழ்க்கையின் பெரும் சொத்து. உடல் நலனுக்கான உடற்பயிற்சி, யோகா,தியானம் போன்ற எளிய பயிற்சிகள் மிகவும் அவசியம்.

யோகா என்றால் ஏதோ பெரிய தவம், துறவு என்றெல்லாம் யாரும் கருத வேண்டாம். அதற்காக ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் மட்டும் ஒதுக்கினாலே போதும். நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். வாழ்க்கை உங்களை வளமாக்கும். உங்கள் கனவுகள் அனைத்தும் உங்கள் வசமாகும். .இவ்வாறு அவர் பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து அறிவுத் திருக்கோயில் பயிற்றுநர்கள் சாந்தி, விஜயராணி, விஜயா, செல்வராணி, சிவ பானுமதி, கவிதா , கணேஷ்நகர் தவ மைய தலைவர் கோவிந்தநாயகி ஆகியோர் யோகா செய்வது பற்றிய பயிற்சியினை மாணவர்களுக்கு செயல்விளக்கமாக செய்துகாட்டினர். கல்லூரி பிஆர்ஓ அசோக்குமார் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்