அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

 

 

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது -திருச்சியில் நடந்த விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.

 

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். 25ஆம் தேதியான இன்று மாலை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விவசாய சங்கபிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்கள், நகர்நல சங்கத்தினர் உடன் கலந்துரையாடினார். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

 

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கோகுல இந்திரா, செம்மலை, பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்பிகள் ப.குமார், ரத்தினவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

 

*அதனை தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது..,*

 

Bismi

விவசாய பணி கடினமான பணி. அதை நான் நன்கு உணர்ந்து உள்ளேன். விவசாயத்தில் உள்ள இடர்பாடுகள் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு நன்கு தெரியும். அடிப்படையில் நான் விவசாயி, நாளைக்கு முதல்வர் ஆன பிறகு அனைத்து தரப்பினரையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

 

அனைத்து துறைகளும் முக்கியம் வாய்ந்த துறைகள்தான். கடினமான துறை வேளாண் துறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உணவும் நீரும் மனிதனின் அடிப்படை தேவை. நீர் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையாக உள்ளது. தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் செய்ய முடியும். அதிமுக அரசு நீர் மேலாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். எந்த அமைப்பை தலைசிறந்த ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்டு செயல்படுத்தினோம். இந்த அமைப்பு மூலம் பருவ காலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீர் அளவீடு செய்தோம், ஏரி குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை கணக்கெடுத்தோம். ஆனால் இந்த திட்டங்களை செயல்படுத்த போது முனைந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மேட்டூரில் தொடங்கி காவிரி ஆறு கடலில் கலக்கும் இடங்களில் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் திமுக அரசு பதவி ஏற்றவுடன் அதனை ரத்து செய்துவிட்டது. மேட்டூர் அணையை தூர்வாரி நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் லாரிகள், வண்டல் மண் எடுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போன்று 14 ஆயிரம் ஏரிகள் கணக்கிடப்பட்டு 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டது. பருவ காலங்களில் பெய்த மழையின் காரணமாக தூர்வாரப்பட்ட ஏரிகள் மூலம் அதிகப்படியான நீர் சேமிக்கப்பட்டது இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயனடைந்தனர். குடிநீர் தேவையும் பூர்த்தியானது. விவசாயிகள் விளைவிக்கும் நெல் கரும்புக்கு மத்திய அரசு வெளிய நிர்ணயம் செய்யும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை ஆனாலும் தமிழக அரசு தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய தொகைகளை வழங்கும். விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கட்டுப்படியான விளைவு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுவாள் தாக்கப்பட்டு விளைச்சல் பாதிப்படைந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இழப்பீடாக 48 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 48 கோடி ரூபாய் செலவில் ரசாயன பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட மக்காச்சோளம் இன்று 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் லாபமடைகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. சிறு,குறு தொழில்கள் நிறைந்த நாடாக இந்தியாவிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. எனவே அதனை பாதுகாப்பது எனது கடமை என பேசினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்