- Advertisement -

திருச்சியில் மிகப்பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி ரசித்துப் பார்க்கும் மக்கள்

- Advertisement -

திருச்சியில் மிகப்பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி ரசித்துப் பார்க்கும் மக்கள்

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் அருகில் உள்ள கே.கே.நகர் மெயின் ரோடு, LIC காலனி, சபரி மில் ஸ்டாப் பகுதியில் மிக பிரம்மாண்டமாக டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைத்துள்ளனர், பொருட்காட்சியினை திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து டைட்டானிக் கப்பலை பார்த்து பயணித்து செல்கின்றனர்,

Vagai

இதுவரை திருச்சியில் இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைத்துள்ளனர், டைட்டானிக் கப்பலை பார்த்து பயணித்த மக்கள் கூறுகயில்…

Bismi

நாங்கள் டைட்டானிக் கப்பல் உள்ளே நுழைந்ததும் டைட்டானிக் படம் பார்க்கும் பொழுது கப்பல் உள்ளே எப்படி மிக பிரம்மாண்டமாக இருக்குமோ! அதே போல் பார்ப்பதற்கு மிகப் பிரமாண்டமாக இருந்தது, படத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் புகைப்படத்துடன் செல்பி எடுத்துக் கொண்டோம், படத்தில் பயன்படுத்தப்பட்ட கார், டைமண்ட் செயின் என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தோம், உள்ளே செல்ல செல்ல ஆர்வம் அதிகமானது, விலங்குகளுடன் இணைந்து புகை படம் எடுத்துக் கொள்வதற்கு மிக சிறந்த முறையில் புகைப்படங்களை அமைத்து இருந்தனர், அனைவரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தோம், செல்லும் வழியெல்லாம் வண்ண வெளிச்சத்துடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ததை வீட்டிற்கு வாங்கி மகிழ்ந்தோம், மேலும் உள்ளே செல்ல செல்ல வண்ண பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட ராட்டினம், 360 டிகிரி ராட்டினம், குழந்தைகளுக்கான ரயில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடுவதற்கு அனைத்து விளையாட்டு சாதனங்களும் எங்களை மிகவும் கவர்ந்து இழுத்தது அனைத்திலும் விளையாடி மகிழ்ந்தோம், பொருள்காட்சியின் உள்ளே சாப்பிடுவதற்கு மிகக் குறைந்த விலையில் தரமாகவும் கிடைக்கின்றது, கழிப்பிட வசதிகளும் சிறந்த முறையில் அமைத்துள்ளனர், இதற்கெல்லாம் மேலாக அனைவரையும் அன்புடன் வரவேற்று மிகுந்த பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா அமைத்து கவனித்துக் கொள்கின்றனர்,

திருச்சியில் நடைபெற்று வரும் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை பற்றி கேள்விப்பட்டு பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூட வந்து ஆர்வமாக பார்த்து செல்கின்றனர் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆர்வமாக தெரிவித்தனர்.

நீங்களும் திருச்சியில் அமைந்துள்ள டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை பார்த்து ரசிக்க வேண்டுமா வாருங்கள் தினமும் மாலை 4:30 மணி முதல், இரவு 10:30 மணி வரை நடைபெறுகிறது, உங்களுக்கென்று செப்டம்பர் 7ஆம் தேதி வரை செயல்படும் அனைவரும் வாருங்கள் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்வோம் மகிழ்ச்சியுடன்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்