லால்குடியில் தூய்மைப் பணியாளர்களுடன் ‘அண்ணாமலையின் தீபாவளி’ கொண்டாட்டம்: ‘வீ த லீடர்ஸ்’ A.S. கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிப்பு!

லால்குடி:
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை (தூய்மை காவலர்கள்) கௌரவிக்கும் விதமாக ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பு சார்பில் ‘அண்ணாமலையின் தீபாவளி’ விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்குத் தலைமை தாங்கிய திருச்சி மாவட்ட புறநகர் பகுதி தலைமை நிர்வாகியும், லால்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளருமான லயன் A.S. கார்த்திகேயன் (B.E., BBL.,) தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள், இனிப்புகள் அடங்கிய தீபாவளிப் பரிசுத் தொகுப்பை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நகரத்தை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காணும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டது. பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், தொடர்ந்து சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள், ஏழை எளியோருக்கான மருத்துவ மற்றும் கல்வி உதவிகள் எனப் பல்வேறு மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்து வரும் A.S. கார்த்திகேயன் அவர்களின் இந்தச் செயலைத் தூய்மைப் பணியாளர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.





Comments are closed.