- Advertisement -

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 33 ஆக குறைவு ; 61 பேர் நலம்

0

- Advertisement -

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 61 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 27 ம் தேதி) 34 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 28 ம் தேதி) பாதிப்பு 33 ஆக குறைந்துள்ளது.

latest tamil news


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 28,916 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 33 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,714 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,55,12,777 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 18 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,15,090 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,37,586 ஆகவும் அதிகரித்து உள்ளது. 61 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,323 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Vagai
Bismi

சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( மார்ச் 27 ம் தேதி) 19 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 28 ம் தேதி) 16 ஆக குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்

latest tamil news

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்