திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது 

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது

 

Bismi

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததற்கும், FMB கிடைக்க ஆவண செய்வதற்கும், திருச்சி, துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நிலஅளவர் ராஜா என்பவரை அணுகியபோது கடந்த 10.07.2025ஆம் தேதி ராஜா ரூ.5,000/-ம் கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 11.07.2025ஆம் தேதி முருகேசன் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025ஆம் தேதி காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நிலஅளவர் ராஜா லஞ்சம் பணம் ரூ.5,000/-த்தை முருகேசனிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, துறையூர் தாலுக்கா குறுவட்ட அளவர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்