போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி!

0

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விஷ சாராய மரணங்களிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளளல்லை, தமிழக அரசு இயந்திரம் செயலிழந்துள்ளது என்பதை தான் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் காட்டுகிறது. மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

 

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

 

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது. தமிழக அரசே தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும், இல்லையென்றால் அங்குள்ள நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

 

- Advertisement -

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற சட்ட போராட்டம் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. 65,000 காலி பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளது. 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு யானை பசிக்கு சோளப்பொரி போன்றது. போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பபட வேண்டும்.

 

சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறான நடவடிக்கை. சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மதிப்பளித்தட வேண்டும்.

 

விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். தேர்தல் நேர்மையாக நடத்தப்படாது என்கிற காரணத்தால் நாங்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்ற பொது தேர்தலிலும் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக தான் இருந்தது. கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக தமிழக அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

 

மத்திய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி உள்ளோம். கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு உண்மை வெளிவர வேண்டும் என்பது தான். அதற்காக தான் அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்