புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

Bismi

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் நெய்விளக்கிட்டு, அணையாவிளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்தனர். வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் வெண்பொங்கல் பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் வருகையையொட்டி கூட்ட நெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்