ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் அறிக்கை…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் அறிக்கை…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, மூன்றாம் நாள் (07 ஜனவரி 2026) மூன்றாம் நாள் அறிக்கை
காலை 5.00 மணிக்கு NSS கொடியேற்றம் மற்றும் அணிவகுப்புப் பயிற்சியுடன் தொடங்கியது. பின்பு யோகா, உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை உணவிற்கு பின், தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, முக்தீஸ்வரர் கோவில், தனலட்சுமி நகர் மற்றும் அம்மன் நகர் குழந்தைகள் பூங்கா, தனலட்சுமி நகர், சமயபுரம் பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டனர்.


மதிய உணவிற்கு பின், விமானப்படை அலுவலர் மற்றும் துணை NCC அலுவலர் டாக்டர் மருதமுத்து “ஒழுக்கம் மற்றும் சுய பாதுகாப்பு திறன்கள்” குறித்து பேசினார்.
மாலையில், துணை முதல்வர்கள் டாக்டர் R. கிருஷ்ணன் மற்றும் டாக்டர்
V. உபேந்திரன் முகாம் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்தனர். உயிர் அறிவியல் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் கணிதத் துறை தலைவர் டாக்டர் R. பழனிகுமார் தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், நுண்ணியல் துணைப்பேராசிரியர் டாக்டர் G. மனோகரன் “கரிம வேளாண்மை” குறித்து பேசினார்.

இருப்பினரிசனை மற்றும் அடுத்தநாள் திட்டமிடலுடன் முடிவுற்றது.


Comments are closed.