திருச்சி புங்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் மோசடி நடைபெறவில்லை – பொதுமக்கள் பேட்டி!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழகுவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக அப்பகுதி அதிமுக கவுன்சிலர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தவறானது எனவும் குறிப்பிட்ட புங்கனூர் பகுதியில் உள்ள ராம்ஜி நகர், காந்திநகர் பகுதியில் மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 100 குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட இரண்டு பகுதியில் தண்ணீர் வரவில்லை என அதிமுக கவுன்சிலர் குற்றம் சாட்டப்பட்ட வீடுகளில் தண்ணீரை தவறான முறையில் மோட்டார் வைத்து தங்களது தேவைக்கு பயன்படுத்திய காரணத்தால் அந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதும், வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் இந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரணத்தினாலும் அந்த பகுதியில் தண்ணீர் வரவில்லை எனவும், மற்ற பகுதியில் வழக்கம்போல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அந்த ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்….
மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக தற்போது ஆய்வு செய்தனர். இதில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. தண்ணீர் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு சரியாக வந்து கொண்டிருக்கிறது. எந்த அடிப்படையில் தற்போது அதிமுகவினர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெரியவில்லை. வதந்தி பரப்பிய அதிமுக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
Comments are closed.