- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை எழுதியதற்காக, மாநில செயலாளரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து
திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Bismi

கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கி வரும் திருச்சி அமராவதியில் நடைபெறும் குறைபாடுகளை தட்டிக் கேட்ட மாநில செயலாளர் பாத்திமாவை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதை கண்டித்தும், அமராவதி பேரில் இயங்கி வரும் கடைகளின் வாடகையை நிர்வாகம் வழங்க வேண்டும், ஆனால் ஊழியர்களே கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதை கண்டித்தும், இந்நிறுவனத்தில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது, அவ்வாறு கட்டுப்பாடற்ற பொருட்களை அமராவதி பெயரில் கொள்முதல் செய்து வெளிச்சந்தையில் விற்பதாகவும், இதை தட்டி கேட்ட பணியாளர் மீது கொலை மிரட்டல் விடுவதாகவும் பணியாளரின் மகன் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் பதியப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்து உள்ளதைக் கண்டித்தும், அமராவதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மூன்று கோடி ரூபாய் வரவில்லை எனவும் இதை தட்டி கேட்டால் நிர்வாகம் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதாகவும் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Vagai

மாநில பொது செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனர் கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்