வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட நிலையில், தந்தை செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோஸி என்ற வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டை அனுகியபோது போலந்து நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
செல்வராஜின் மனைவி செல்வியின் தம்பி சரவணக்குமார் தனது நிலத்தை கிரையம் வைத்து வெளிநாடு செல்ல பணம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பாமலும், அதேநேரம் பணத்தையும் திருப்பி தராமலும் புனிதா ரோசி ஏமாற்றி வந்துள்ளார்.

பணத்தைக் கேட்ட கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த நிலையில், கோபிநாத் மற்றும் அவரது தந்தை செல்வராஜ் இருவரும் தொட்டியம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறை தரப்பில் இதுவரை பணத்தை மீட்டுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஒருபுறம் கடன் கட்ட முடியாமல் விவசாயக் கூலிதொழிலாளி குடும்பத்தினர் இன்னலுக்கு ஆளாக மறுபுறம் பணத்தை ஏமாந்த நிலையில் செய்வதறியாது இருந்த கோபிநாத், அவரது தந்தை செல்வராஜ், தாயார் செல்வி, மாமா சரவணகுமார் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுக்கு வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என்றும் இனிமேலும் காவல்துறை மோசடி பெண் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தராவிட்டால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வோம் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.


Comments are closed.